கூலித்தொழிலாளியை வெட்டி கொலை: அண்ணன் மற்றும தம்பிக்கு ஆயுள் தண்டனை

27 November 2020, 9:42 pm
Quick Share

திருப்பூர்: குண்டடம் அருகே கூலித்தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் அண்ணன், தம்பி இருவருக்கும் தாராபுரம்  கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள குண்டடம் அருகே நந்தவானம்பாளையம் கணக்கம்பட்டி அரிஜன காலணியை  சேர்ந்த  ஆறுமுகம்  மகன் முருகன் மற்றும் தம்பி தண்டபாணி இருவரும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் பாலன் ஆகியோருக்கு இடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இதனை அடுத்து கடந்த 30.4.2016ம் ஆண்டு  இரவு  மாணிக்கம்பட்டி பிரிவு அருகே  நடந்து வந்த  பாலனை  வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக குண்டடம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து  முருகன்  மற்றும் தண்டனையை கைது செய்து  கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் மாவட்ட எஸ்பி பரிந்துறையின் பேரில் திருப்பூர்  மாவட்ட அப்போதைய கலெக்டர் ஜெயந்தி அண்ணன், தம்பி இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இதன் வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அதன் வழக்கை அரசு வக்கீல் என்.ஆனந்தன் வாதிட்டு வந்தார். இதன் இறுதி கட்ட விசாரணையின் இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பி.கருணாநிதி பரபரப்பான தீர்ப்பை அறிவித்தார்.

அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட முருகன் இவரது தம்பி தண்டபாணி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டணை வழங்கியும் அபராத தொகை தலா ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும்.அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டணை அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார்.இதனை தொடர்ந்து இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 19

0

0