கடனை உடனடியாக செலுத்த கட்டாயப்படுத்தும் மைக்ரோ பைனான்ஸ்… மாதர் சங்கத்தினர் புகார்…

3 August 2020, 8:22 pm
Quick Share

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெற்ற கடனை உடனடியாக செலுத்த கட்டாயப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாநகர மாதர் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் தனியார் சுய உதவிக்குழுக்கள் என்கிற பெயரில் மைக்ரோ பைனான்ஸ் குழுக்கள் இயங்கி வருகின்றது. ஊரடங்கால் வேலை இழந்த பெண்கள் வாங்கிய கடனுக்கான நிலுவை தொகையினை கட்ட முடியவில்லை, இந்நிலையில் கடன் நிலுவை தொகையினை கட்ட வலியுறுத்தி மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தினர் தங்களை கட்டாயப்படுத்துவதாகவும், இதனால் வாழ்வாதாரம் இழந்த பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகவும், தவணை காலத்தை 2021 மார்ச் வரை நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மதுரை மாநகர மாதர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

Views: - 31

0

0