அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்: தொண்டர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி அறிவுரை

25 August 2020, 10:24 pm
Quick Share

திருப்பத்தூர்: புதிய இளைஞர்களை உருவாக்கி அடிமட்ட தொண்டர்கள் மூலமாக அதிமுக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு அமைச்சர் கே.சி.வீரமணி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
 
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் தேசிய நெடுஞ்சாலையோரம்  உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நகரக் கழகச் செயலாளர் சதாசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய விண்ணப்ப படிவங்களை வழங்கினார்.

இதைதொடர்ந்து அவர் பேசுகையில், வருகின்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக ஆட்சி வெற்றி பெற புதிய இளைஞர்களை உருவாக்கி அடிமட்ட தொண்டர்கள் மூலமாக அதிமுக அரசின் சீரிய  திட்டங்களை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதேபோல் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கையில், கடந்த 2008ம் ஆண்டு வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த பெருமைக்குரிய மாவட்டம் என்பதை சுட்டிக்காட்டினார்.
 
பின்னர் பேசிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து அடிதடி, நில அபகரிப்பு உள்ளிட்ட அராஜக செயலில் ஈடுபடுவார்கள். ஆகையால் வருகின்ற தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதிமுக அரசு வெற்றிபெற பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.வி.சம்பத்குமார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.டி.சங்கர், வேலூர் புறநகர் செயலாளர் வேழலகன், மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே., ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 33

0

0