அரியலூர்: வாலாஜாநகரம் கிராமத்தில் மருந்து பெட்டகங்கள் வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். .
அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம் கிராமத்தில் பெரு நிறுவனங்களின் சமூக பங்களிப்பின் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் அதே கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு நடந்து சென்று இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து பெட்டகங்களை வழங்கினார். பின்னர் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கபட்டது. இதில் பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
0
0