1070 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர்

19 September 2020, 7:23 pm
Quick Share

தருமபுரி: அரூரில் நடைபெற்ற விழாவில் ரூ.5 கோடியே 13 லட்சம் மதிப்பில் 1070 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற விழாவில் ரூ.5 கோடியே 13 லட்சம் மதிப்பில் 1070 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார். தெனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் அரூரில் நடைபெற்ற விழாவில் புதிய குடும்ப அட்டை 554 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலும், முதியோர் உதவித்தொகை 250 பயனாளிகளுக்கும், ரூ.2 கோடியே 86 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலும், இலவச வீட்டுமனைப்பட்டா 29 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், 62 நபர்களுக்கு சாதிச் சான்றிதழ்களும்,

தோட்டக்கலைதுறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலும், அம்மா இருசக்கர வாகனம் 44 பயனாளிகளுக்கும், தொகுப்பு வீடு கட்ட 48 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 44 இலட்சம் மதிப்பிலும், இலவச தையல் இயந்திரம் 7 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலும் என மொத்தம் ரூ.5 கோடியே 13 இலட்சம் மதிப்பில் 1070 பயனாளிகளுக்கு உயர் கல்வி துறை அமைச்சர் வழங்கினார். இந்த விழாவில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி, அரூர் சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0