எளாவூர் சோதனை சாவடியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு

12 June 2021, 6:31 pm
Quick Share

திருவள்ளூர்: எளாவூர் ஒருங்கிணைந்த நவீன போக்குவரத்து சோதனை சாவடியில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். போக்குவரத்து சோதனைச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமரா வசதிகள் குறித்தும், சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தமிழக ஆந்திர எல்லையில் கஞ்சா செம்மரம் போன்ற சட்டவிரோத கடத்தல்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் நடைபெறும் தீவிர வாகன சோதனைகள் குறித்தும் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் அவர் விவரங்களை கேட்டறிந்தார்.

Views: - 85

0

0