மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு

Author: Udhayakumar Raman
5 August 2021, 3:33 pm
Quick Share

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சென்னை கொளத்தூர் பகுதியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இன்று மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமணபள்ளி கிராமத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் கிருஷ்ணகிரி , சென்னை , சேலம், மதுரை, தஞ்சாவூர், கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஆகிய 8 – மாவட்டங்களில் ( video conferencing) மூலம் 258 கோடி முதலீட்டில் 30 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் நோக்கில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக மக்களை தேடி மருத்துவம் நிகழ்ச்சியை சென்னை கொளத்தூரில் உள்ள ஜி.கே.எம் காலனியில் உள்ள மைதானத்தில் மக்களை தேடி மருத்துவ வாகனத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.அதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

Views: - 69

0

0