பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர்

12 September 2020, 10:19 pm
Quick Share

தருமபுரி: வத்தல்மலை கிராம மக்களின் வசதிக்காக புதிய கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மற்றும் 10.22 கோடி மதிப்பில் மலை கிராமங்களை இணைக்கும் புதிய தார் சாலைபணிகளை உயர்கல்விஅமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம் வத்தல்மலை கிராமத்தில் வத்தல்மலை, பெரியூர், பால்சிலம்பு, சின்னாங்காடு உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்துள்ளது. மலை கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக சுமார் 20 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இந்த பகுதிக்கு தார்சாலை வசதி இல்லாததால் மக்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வந்தது. மலை கிராம மக்களின் வசதிக்காக ரூ.10.22 கோடி மதிப்பில் புதிய தார்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கியது. மேலும் மலை மீதுள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செல்ல மலையை விட்டு கீழே இறங்க வேண்டும் என்பதால், சுமார் 800 குடும்ப அட்டைகளைப் பிரித்து புதிதாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வத்தல் மலை கிராம மக்களின் வசதிக்காக இன்று புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் கே.பி.அன்பழகன் துவங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 85 பயனாளிகளுக்கு சுமார் 20.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Views: - 4

0

0