நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலைக்கு நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

23 January 2021, 1:10 pm
Quick Share

புதுச்சேரி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இந்திய ராணுவத்தை உருவாக்கியவரும், சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 124 வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு இன்று இவரது முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செய்தார். தொடர்ந்து, பா.ஜ.க, காங்கிரஸ் கட்சியினர் நேத்தாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Views: - 4

0

0