தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…

2 August 2020, 12:19 pm
Quick Share

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய சிலைக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைவின் 215 வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலையில் உள்ள மணிமண்டபத்தில் தமிழக அரசின் சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தியாகம் செய்த தலைவர்களுக்கு நினைவு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

Views: - 5

0

0