சுதந்திர போராட்ட வீரர் குமரனின் படத்திற்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

By: Udayaraman
4 October 2020, 5:10 pm
Quick Share

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் குமரனின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான சென்னிமலையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த கொடி காத்த குமரனின் 117 வது பிறந்தநாளை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர் குமரனின் பிறந்த ஊரான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவருடைய வீட்டில் அவரின் படத்திற்கு அரசின் சார்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் மற்றும் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் மாலையிட்டு மரியாதை செலுத்தினர் இதனை தொடர்ந்து வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்தனர்.முன்னதாக கொடி காத்த குமரனின் சிலைக்கு மாலை அணிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 35

0

0