கொரோனா பரிசோதனை முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்கள்

6 September 2020, 3:52 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகம் தொற்று உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யும் முகாமை சுகாதார துறை அமைச்சர் மற்றும் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநிலத் முழுவதும் கொரோனா பரிசோதனையை அதிகப்பட்டுத்தும் நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்றது. இதனை சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் துவங்கி வைத்தனர். மேலும் முத்தியால்பேட்டை பகுதியில் பாதிப்பு அதிகம் உள்ள 11க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று இந்த பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.

Views: - 9

0

0