முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின்: இனிப்புகள் வழங்கி கொண்டாடிய திமுகவினர்

7 May 2021, 6:19 pm
Quick Share

நீலகிரி: தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பதவியேற்றதையடுடுத்து நீலகிரி மாவட்ட திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றார் மேலும் அமைச்சர்களும் பதவியேற்றனர். இதைக் கொண்டாடும் வகையில் நீலகிரி மாவட்ட திமுக சார்பில் காபி ஹவுஸ் சந்திப்பில் வெற்றி கோஷங்கள் எழுப்பப் பட்டு பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் நகர திமுக அலுவலகத்தில் கேக் வெட்டி இந்த வெற்றியை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உறுப்பினர்கள் கொண்டாடினர்.
இந்த வெற்றி கொண்டாட்டத்தில் மாவட்ட செயலாளர் பா.மு முபாரக் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 43

0

0