உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் எம்.எல்.ஏக்கள் சதி: அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் குற்றச்சாட்டு

Author: kavin kumar
10 October 2021, 5:31 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவிடாமல் எம்.எல்.ஏக்கள் சதி செய்வதாக அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வையாபு வையாபுரி மணிகண்டன் குற்றச்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு பிரிவு தேர்தல் பிரிவு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் புதுச்சேரிக்கு வர வேண்டிய 2500 கோடிக்கான மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி உள்ளதாக எம்.எல்.ஏ ஒருவர் நீதிமன்றம் செல்கின்றார். ஒரு சில எம்.எல்.ஏக்கள் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றார்கள்.

இது முற்றிலும் நாடகம் என்றும், பட்டியலின மக்களுக்கு வார்டு ஒதுக்கீட்டை ரத்து செய்து ஆளுநர் வெளியிட்ட அரசானையை அமைச்சரவை பரிந்துரை இல்லாமல் எப்படி வெளியிட முடியும் என கேள்வி எழுப்பிய வையாபுரிமணிகண்டன், அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க எந்த சட்டமன்ற உறுப்பினருக்கும் விருப்பம் இல்லை ஆகவே உள்ளாட்சித்தேர்தலை நடத்தவிடாமல் குளறுபடிகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Views: - 261

0

0