பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

10 July 2021, 3:24 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மக்கள் நீதிமய்யம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்,மாவட்ட தலைவர் ஜெயவெங்கடேசன் தலைமையில், பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து மண் அடுப்பு வைத்து சமையல் செய்து, பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன பாதாதைகளை ஏந்தியும், கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் கட்சினர் கலந்துகொண்டனர்.

Views: - 42

0

0