நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் : சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 7:01 pm
Ariyalur Protest -Updatenews360
Quick Share

அரியலூர் : நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் செயல்படுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் இணைந்து நடமாடும் நெல் கொள்முதல் செயல்படுத்த வேண்டும் என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடமாடும் நெல் கொள்முதல் செய்வோம் என கூறிவிட்டு அதனை செயல்படுத்தாமல் உள்ளதை கண்டித்தும், சிறு, குறு, பெரு விவசாயிகளின் அறுவடை காலங்களின் போது வயல்களிலும் மற்றும் வீடுகளிலும் வந்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தபட்டது. இதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Views: - 385

0

0