நடமாடும் தடுப்பூசி முகாம்: ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்

Author: kavin kumar
9 August 2021, 4:59 pm
Quick Share

திண்டுக்கல்: அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற நடமாடும் தடுப்பூசி முகாமில் இன்று ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் கொடைரோடு,ஜெகநாதபுரம், இரயில்வே காலனி ஆகிய பகுதிகளில் கொரோனா பரிசோதனையுடன் தடுப்பு ஊசி செலுத்தும் முகாம்கள் நடைபெற்றது இதனால் இன்று ஒரே நாளில் அப்பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நடமாடும் தடுப்பூசி முகாமால் அப்பகுதியை சேர்ந்த இல்லத்தரசிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.இதுபோன்ற நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம்களால் அந்த தந்தப்பகுதிலே வந்து தடுப்பூசி செலுத்துவதால் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இது போன்ற செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Views: - 149

0

0