போலி முகநூல் கணக்கு மூலம் நூதன முறையில் பணப்பறிப்பு: பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் புகார்

13 January 2021, 5:12 pm
Quick Share

ஈரோடு: போலியாக முகநூல் கணக்கு மூலம் நூதன முறையில் பணப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்.இவர் புனேவில் உள்ள மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவர் தனது பெயரில் முகநூலில் கணக்கை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது முகநூல் கணக்கு போல போலியாக முகநூல் கணக்கு உருவாக்கி சந்தோஷ்குமாரின் நண்பர்களிடம் பழகி பின்னர் அவர்களிடம் பணம் பெற்று வந்துள்ளான்.

இது குறித்து இவரது ஊர் நண்பர்கள் தியாகு என்பவர் சந்தோஷ்குமாரிடம் தெரிவித்தார்.இதை அறிந்த சந்தோஷ்குமார் போலி முகநூல் கணக்கு குறித்து முகநூல் உதவியுடன் முடக்கியுள்ளார்‌ மேலும் இதுகுறித்து இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.இச்சம்பவத்தில் இவரது நண்பர் 15ஆயிரம் கொடுத்து ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 2

0

0