தொடர் மழை காரணமாக நிரம்பியது மோர்தானா அணை:விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

Author: Udhayakumar Raman
14 October 2021, 5:29 pm
Quick Share

வேலூர்: தொடர் மழை காரணமாக மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதும் நிரம்பியது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம், தமிழக ஆந்திர எல்லையோரம் தமிழக பகுதியில் அமைந்துள்ள மோர்தானா அணை வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையாகும். இந்த அணை 11.50 மீட்டர் உயரமும் 261 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை. தற்போது ஆந்திர தமிழக எல்லை வரும் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் மோர்தனா அணைக்கு நீர்ஆதாரமாக உள்ள ஆந்திர மாநிலம் பலமனேர், புங்கனூர், பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணை வேகமாக நிரம்பியது. இதனிடையே இன்று மோர்தானா அணை தனது முழு கொள்ளளவை எட்டி அணை முழுவதும் நிரம்பியது. மேலும் தற்போது 90 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. மேலும் உபரி நீராக 90 கன அடி தண்ணீர் அணையில் இருந்து உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மோர்தானா அணை நிரம்பியதால் குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதிகளில் உள்ள பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிவதை அடுத்து மாவட்ட ஆட்சியர் நீர் நிலைகள் அணைகள் உள்ளிட்ட பகுதிகளில் செல்வதற்கும் குளிப்பதற்கும் தடை விதித்துள்ளார் இதை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் .

Views: - 511

0

0