மாடு விடும் திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

25 February 2021, 5:54 pm
Quick Share

வேலூர்: பழைய காட்பாடி பகுதியில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பழைய காட்பாடி பகுதியில் ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கோட்டை அம்மன் திருவிழாவை முன்னிட்டு 74 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அண்டை மாநிலமான ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்து ஓடின. குறைந்த நேரத்தில் இலக்கை பிடித்த முதல் காளைக்கு 81 ஆயிரம் ரூபாயும்,

இரண்டாம் பரிசு 60 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது பரிசு 50 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 35 பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக எருது விடும் விழாவிற்கு முன் விழா குழுவினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றனர். இந்த திருவிழாவில் காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க மத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 1

0

0