பாஜகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்டோர் அமமுக நிர்வாகிகள்…

4 September 2020, 5:54 pm
Quick Share

சேலம்: சேலம் மாவட்ட அமமுக இளைஞரணி துணைச் செயலாளர் குட்டி என்கின்ற சோலை குமரன் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பாஜகவில் இணைந்தார்.

அமமுக நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணையும் நிகழ்ச்சி சேலத்தை அடுத்துள்ள பூலாவரியில் நடைபெற்றது. சேலம் மாவட்ட அமமுக இளைஞரணி துணைச் செயலாளர் குட்டி என்கின்ற சோலை குமரன் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைத்துக்கொண்ட நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சேலம் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் முன்னிலையில் குட்டி என்கின்ற சோலை குமரன் தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பாஜகவில் இணைந்தனர்.

பாஜகவில் இணைந்த நிர்வாகிகள் உட்பட 500 பேருக்கு கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் கட்சித் தொண்டர்களை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மணிகண்டன் கூறுகையில், “தமிழகத்தில் பாஜகவை வலிமைப்படுத்த மாநிலத் தலைவர்கள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் பாஜகவை வலுப்படுத்த தீவிரமாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து குட்டி என்கின்ற சோலை குமரன் கூறுகையில், “தான் சார்ந்திருந்த ஆமாம் உணவில் போதுமான மரியாதை இல்லாததன் காரணமாக தற்போது முதல் கட்டமாக தனது ஆதரவாளர்கள் 500 பேருடன் பாஜகவில் இணைந்து உள்ளதாகவும், தனது ஒன்றியத்திற்குஉட்பட்ட பகுதிகளில் இருக்கும் இளைஞர்கள் 1,500 பேரை விரைவில் பாஜகவில் இணைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0