பூட்டிய வீட்டில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய் மற்றும் மகன்

By: Udayaraman
1 October 2020, 7:14 pm
Quick Share

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அருகே ஆதனூர் பகுதியில் உள் தாழ்ப்பாள் போட்ட வீட்டினுள் தாய் மற்றும் ஆறு வயது மகன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த பெண் நிஷா ஏஞ்சல். இவருக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் பகுதியில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டது. அவர் திருமணமாகி வளைகாப்பு செய்யப்பட்டு மகப்பேறுக்காக தாய் வீட்டுக்கு ஆதனூர் வந்தவர் மீண்டும் திருவள்ளூர் பகுதிக்கு செல்ல வில்லை. இவருக்கு டேனியல் வயது 6 என்ற மகன் உள்ளார். சுமார் நான்கு வருடமாக கணவரை பிரிந்து தனியார் நிறுவனத்தில் பணி செய்யும் தன் தங்கையுடன் மற்றும் 6 வயது மகன் டேனியல் உடன் வசித்து வந்தார். இன்று திடீரென அவர் வசித்த பகுதியில் இருந்து புகை மூட்டம் எழுந்தது . அக்கம் பக்கத்தினர் புகை வருவதைக் கண்டு புகை எங்கிருந்து வருகிறது என்று பார்த்து அதிர்ச்சியுற்றார்கள்.

நிசான் வீட்டில் உள் தாப்பாள் போட்டு இருந்ததால் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும்போது நிஷாவும், அவரது மகன் டேனியல் தீயில் கருகி சாம்பல் ஆனதை கண்டு அதிர்ந்தனர். உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடுவாஞ்சேரி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது மின் கசிவு மற்றும் இதர பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் தடவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 37

0

0