2 குழந்தைகளின் தாய் மாயம்.! இரண்டாவது கணவர் போலீசில் புகார்

23 February 2021, 4:49 pm
Quick Share

கன்னியாகுமரி: பளுகல் அருகே 2 குழந்தைகளின் தாய் மாயம் குறித்து இரண்டாவது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குமரி மாவட்டம் பளுகல் அடுத்துள்ள வன்னியர் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (33). இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பிந்துஜா (27 ). பிந்துஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்று கணவர் இறந்துள்ளார் .இரண்டாவது திருமணம் செய்த இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய பிந்துஜா இரண்டு நாட்களாக வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நண்பர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் கணவர் ராஜன் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இன்று பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிந்துஜாவை தேடி வருகின்றனர்.

Views: - 5

0

0