மலேசிய கடலில் தவறி விழுந்த மகனை மீட்டுத் தர வலியுறுத்தி தாய் கண்ணீருடன் மனு

21 September 2020, 4:23 pm
Quick Share

திருச்சி: மலேசிய கடலில் தவறி விழுந்த மகனை மீட்டுத் தர வலியுறுத்தி தாய் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்து ள்ள எதுமலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் – கலா தம்பதியினர் மகன் கோபு(25). இவர் மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு மலேசியவில் கப்பலில் கடந்த ஆறு வருடங்களாக பணியாற்றி வருகிறார். தினம் தோறும் மகனிடம் குடும்பத்தினர் செல்போன் மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தனது தாய் கலாவுக்கு அழைப்பு விடுத்து பேசியதாகவும், அதன்பிறகு அழைப்பு வரவில்லை என்றும் தெரிவிக்கிறார் தாய் கலா.

இந்நிலையில் நேற்று இரவு கோபுவின் நண்பர் அழைத்து கோபு கால் தவறி கடலில் விழுந்ததாகவும், அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். கோபு கால் தவறி விழுந்தது உண்மைதானா என்பது தெரியவில்லை என்றும், தன்னுடைய மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா? என்பது தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கண்ணீர் வடிக்கிறார் அவருடைய தாய் கலா. இந்நிலையில் தன்னுடைய மகனின் நிலை குறித்தும் அவரை மீட்டுத் தர வலியுறுத்தியும், மனு அளித்து சென்றார். மலேசியாவில் உள்ள மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில் கண்ணீருடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் மனு கொடுத்தது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Views: - 6

0

0