கொரோனாவில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பிய ஆணையர்.!!!

24 August 2020, 1:54 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனாவில் இருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய நகராட்சி ஆணையருக்கு பூங்கொத்து கொடுத்தும் கை தட்டியும் உற்சாகமாக ஊழியர்கள் வரவேற்றனர்.

புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமிக்கு கடந்த ஜூலை மாதம் 19ஆம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த பின்னர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். உழவர்கரைகரை நகராட்சி அலுவலத்திற்கு வந்த ஆணையர் கந்தசாமியை ஊழியர்கள் பூங்கொத்து கொடுத்தும், கை தட்டியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தினர். பின்னர் இருக்கையில் அமர்ந்து பணியை தொடர்ந்தார்.

Views: - 8

0

0