இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டம்…

1 September 2020, 4:06 pm
Quick Share

புதுச்சேரி: இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் புதுச்சேரி நகராட்சி தலைமை அலுவலகம் வாயலில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டதில் ஈடுப்பட்டனர்.

புதுச்சேரி நகராட்சியில் 500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் இந்த ஊழியர்கள் கிருமி நாசினி தெளிப்பது, கொரோனா பாதிப்ப அடைந்த பகுதிகளை அடைப்பது , இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது போன்ற பணிகளில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட நகராட்சி ஊழியர்கள் புதுச்சேரி நகராட்சி தலைமை அலுவலகம் வாயலில் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் பிற அரசு துறைகளுக்கு சரியாக மாதமாதம் சம்பளம் வழங்குவது போல் தங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Views: - 0

0

0