காரில் கடத்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கொலை: போலீசார் விசாரணை

23 June 2021, 6:31 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே கொலை குற்ற சம்பவத்தில் குற்றவாளியான நபரை மர்மநபர்கள் காரில் கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி காவல் சரகத்துக்கு உட்பட்ட காமன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( 50 ) என்கிற முருகேசன். இவர் ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே பெண் நீலிமா மற்றும் அவரது கார் டிரைவர் முரளி ஆகியோரை கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரில் வந்தவர்கள் மீது லாரியை மோத விட்டு பெட்ரோல் குண்டுகளை வீசி கொலை செய்த வழக்கில் மதுரை சேர்ந்த வழக்கறிஞர் உள்பட 14 பேர் குற்றவாளிகள், இதில் 13வது குற்றவாளி முருகன். முருகனுக்கு சொந்தமான விவசாய நிலம் காமன்தொட்டி கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்காபுரத்தில் உள்ளது.

இவர் நேற்று காலை வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார். முருகனின் தோட்டத்தின் அருகே மர்ம நபர்கள் முருகனை காரில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெகுநேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் முருகனை தேடி சென்றதாகவும், முருகனின் தோட்டத்தின் அருகே அவரது இருசக்கர வாகனம் மட்டும் இருந்ததாகவும், அவரின் இருசக்கர வாகனம் அருகே காலில் செருப்பு இருந்ததாகவும், மர்ம நபர்கள் முருகனை காரில் கடத்தி சென்றிருப்பதாகவும், இது குறித்து முருகனின் உறவினர்கள் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் காணவில்லை” என்று வழக்கு பதிவு செய்து முருகனை தேடி வந்தனர் சூளகிரி போலீசார்.

இந்த நிலையில் ஓசூர் அருகேயுள்ள கொல்லப்பள்ளி கிராமத்தில் செயல்படாத கல்குவாரியில் உள்ள நீர் குட்டையில் கடத்தப்பட்ட முருகன் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற சூளகிரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்புவைத்தனர். மேலும் இறந்து கிடந்த நபர் கானாமல் போன முருகன் என்பதும் உறுதியானது.முருகனை யார் கடத்தி கொலை செய்யப்பட்டனர் எதற்க்காக என பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Views: - 122

0

0