வடமாநில கூலி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு: போலீசாரின் விசாரணையில் வெளியான தகவல்…

23 June 2021, 4:59 pm
Quick Share

திருவள்ளூர்: செங்குன்றத்தில் நவீன அரிசி ஆலையில் பணிபுரிந்த வடமாநில கூலித்தொழிலாளி பலத்த காயங்களுடன் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாலவாயில் சோத்துப்பாக்கம் சாலையில் அண்ணாநகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையில் சுமார் 80 நபர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த வடமாநில கூலித்தொழிலாளியாக மாந்துசோரன் ( 22) என்பவர் வேலைசெய்து வந்தார். இந்நிலையில் அரிசிமூட்டைகளுக்கு இடையே மாந்துசோரன் தலை மற்றும் உடலில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த அவரை அங்குள்ளவர்கள் ஒரு ஆட்டோவில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிந்ததால் சடலத்தை அதே வாகனத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டனர்.

ஆலைக்கு வந்த உரிமையாளர் வெங்கடேசனிடம் ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, செங்குன்றம் காவல்நிலையத்தில் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மாந்துசோரன் தவறி விழுந்து படுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.

Views: - 50

0

0