ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி

15 April 2021, 4:54 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் கரூர் வைஸ்யா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டுவருகிறது. இன்று காலை பணம் எடுக்க வந்த நபர் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். விசாரணையில் நேற்றிரவு மர்ம நபர்கள் ஏடிஎம் அறைக்குள் புகுந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா இணைப்புகளை துண்டித்து கற்களால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர் ‌. பணம் இருந்த இடத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 12

0

0