இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாகை துறைமுகம் மூடல்… மீன்வளத்துறை அறிவிப்பு…
9 August 2020, 5:16 pmநாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று, நோய் பரவலை தடுக்க இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாகை துறைமுகம் மூடபடும் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை நேற்றுடன் 1076 ஐ தாண்டியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்ந்து நாகை நகராட்சி அலுவலகமும் நேற்று மூடப்பட்டது. இந்த நிலையில் நோய் பரவலை தடுக்கும் வகையில் நாகை துறைமுகம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடபடுவதாக மீன்வளத்துறை நேற்று அறிவித்தது.
இதனால் எப்பொழுதும், பரபரப்பாக காணப்படும் நாகை மீன்பிடித் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், மீனவர்களும் அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொழில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். வருமானத்தை பார்க்காமல் நோய் பரவலை தடுக்க அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக நாகை மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.