மனைவியின் கார்களுக்கு தீ வைத்த கணவன்

4 August 2020, 10:13 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் வீட்டில் நின்ற 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள 2 கார்களை தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் சேர்ந்தவர் யூஜின் மரிய ஸ்டாலின் ( 37). இவருக்கும் நாகர்கோவில் ஹோலி கிராஸ் நகரை சேர்ந்த ஹெசில்டா மேரி(33) என்பவருக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த யூஜின் மரிய ஸ்டாலினுக்கு கடந்த சில வேலை இல்லாததால் சொந்த ஊர் வந்தார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இதனால் இருவருக்கும் விவாகரத்து பெற சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆத்திரத்தில் மனைவியின் வீட்டிற்கு சென்ற யூஜின் மரிய ஸ்டாலின் மனைவி வீட்டில் நிறுத்தப்பட்டு இருந்த விலை உயர்ந்த 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு கார்களை தீ வைத்ததாக கூறப்படுகிறது இதனால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதனை அடுத்து ஹெசில்டா மேரி அளித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 8

0

0