பெட்ரோல் விலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.. சைக்கிள் மிதித்து எதிர்ப்பை பதிவு செய்த நாராயணசாமி

7 July 2021, 1:31 pm
Quick Share

புதுச்சேரி: அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் வந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, செஞ்சி சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சைக்கிளில் வந்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்ற வாகன ஓட்டிகளிடம் கையெழுத்தை பெற்றனர் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முதல் 17ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடைபெற உள்ளதாகவும்,

மத்தியில் உள்ள அராஜக நரேந்திர மோடி அரசு பெட்ரோல் டீசல் விலையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெறுவதாக கூறிய அவர், கடந்த ஜீன் மாதம் மட்டும் 16 முறையும், இந்த ஆண்டு இதுவரை 93 முறை பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 350ல் இருந்து இன்று 850ஆக உயர்ந்துள்ளது, இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறிய அவர், ஒரு புறம் கொரோனா பாதிப்பு, மறுபுறம் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக சிரமப்படுகின்ற நேரத்தில் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி மக்களுக்கு பெரும் சுமை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு என தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், தற்போது என்ன பதில் சொல்வார் என கேள்வி எழுப்பினார், புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொரோனா வரி போட்டு அதை படிப்படியாக குறைத்தோம், தற்போது பெட்ரோல் டீசலுக்கு போடப்பட்டுள்ள கொரோனா வரியை குறைத்தால் மக்களுக்கு நிவாரணம் கொடுத்ததாக இருக்கும் என கூறிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினால் பாஜக தலைவர் வாஜ்பாய் முதல் அனைவரும் பாராளுமன்றத்திற்கு கட்டை வண்டியில் சென்றார்கள், தற்போது நரேந்திர மோடி எந்த வண்டியில் செல்வார் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

Views: - 291

0

0