கஞ்சா, கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க முனைப்பாக செயல்பட நாராயணசாமி அறிவுரை

4 November 2020, 5:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா, கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க காவல்துறை முனைப்பாக செயல்பட வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி அறிவுத்தியுள்ளார்.

புதுச்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் ரூபாய். 3.17கோடி மதிப்பில் புதியதாக லாஸ்பேட்டை காவல் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர், அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, பல்வேறு போராட்டங்கள், எதிப்புகளுக்கிடையே மாநில மக்கள் அளித்த ஒத்துழைப்பின் காரணமாக மத்திய அரசிடம் இருந்து பல விருதுகளை பெற்றுள்ளதாகவும்,

புதுச்சேரி காவல்துறையை நவீன மையமாக்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்த நிலையில், தேவையான நிதி அளிப்பதாக உறுதி அளித்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் கஞ்சா, கள்ள லாட்டரி விற்பனையை தடுக்க காவல் துறை முனைப்பாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து பேசும்போது, சர்வசாதாரணமாக செல்போன் சிறைக்குள் செல்கிறது என்றும் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் கடந்த காலங்களில் 50ரூபாய் கொலை நடைபெறும் என்றும், குழந்தை, தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்பார்கள், முதலமைச்சர் அலுவலகம் ரவுடிகளுக்கு பாதுக்கப்பு அளிக்கும், ஆனால் தற்போது பல்வேறு வழக்குகளில் காவல்துறை துரிதமாக செயல்பட்டு வருகிறது என்றார். முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி கிடப்பில் போட்ட திட்டங்களை தற்போது செயல்படுத்தி வருகிறோம் எனவும் பேசினார்.

Views: - 18

0

0