விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க வலியுறுத்திய நாராயணசாமி: கண்டனம் தெரிவித்த அன்பழகன்

Author: Udhayakumar Raman
6 September 2021, 4:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்து நிலையில் மத பிரச்சனையை உண்டாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவிப்பது கண்டிக்கதக்கது என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத ரீதியில் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பொய்யான கருத்தை கூறி மாநிலத்தில் ஒரு குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்றும், விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து கொரொனா விதிமுறையை பின்பற்றி மக்கள் வழிபடலாம் என துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், ஸ்டாலினிடம் நற்பெயரை பெறுவதற்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தமிழகத்தை பின்பற்றி விநாயகர் சிலையை வைக்ககூடாது என கூறுவது மத ரீதியான பிரச்சனையை ஏற்படுத்தும் என தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் முதல்வராக இருந்த நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா உச்சத்தில் இருந்த போது புத்தாண்டு மற்றும் சனி பெயர்ச்சி விழாவிற்கு அனுமதி அளித்தார், தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கதக்கது என்றார். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதும். அந்த சீட்டை பெறுவது குறித்து புதுச்சேரி அதிமுக தலைமை கழகத்தை வலியுறுத்தும் என்றும் அன்பழகன் தெரிவித்தார்.

Views: - 215

0

0