விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கும் முடிவை ஆளுநர் கைவிட நாராயணசாமி வலியுறுத்தல்

Author: Udhayakumar Raman
4 September 2021, 10:29 pm
Pondy Narayanasamy - updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கும் முடிவை ஆளுநர் தமிழிசை கைவிட வேண்டும் என நாராயணசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி கொரோனாவின் மூன்றாவது அலை குறித்து அச்சப்பட்டு வரும் நிலையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைக்கலாம், விழாக்களை நடத்தலாம் என்ற துணை நிலை ஆளுநரின் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், எல்லா விழாக்களும் கொண்டாடப்பட வேண்டும் விதிமுறைகளுக்குட்பட்டு கொண்டாட வேண்டும் எனவும். பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும்போது பொதுமக்கள் அதிகளவு கூடும் நிலையில் கொரோனா தொற்று பரவும் நிலை உருவாகும் மேலும் விநாயகர் ஊர்வலம் செல்லும்போதும்  மக்கள் கூடுவார்கள்.

இதன் மூலமும் தொற்று பரவ அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த நாராயணசாமி, ஏற்கனவே நமக்கு படிப்பினை உள்ளது ஆகவே விநாயகர் சிலைகளை வீட்டிலே வைத்து வழிபட வேண்டும், விநாயகர் ஊர்வலகங்கள் நடத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டது போல, புதுச்சேரி மாநிலத்திலும் அதை கடைபிடிக்க வேண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடத்தில் கொண்டாடுவது மூலம் பெரிய அளவில் கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்றும், புதுச்சேரியில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே போகின்றது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவை எளிய முறையில் கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

துணை நிலை ஆளுநரின் உத்தரவை மறு பரிசிலனை செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி, இந்த விவகாரத்த தலையிட்டு முடிவு காணவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதலமைச்சர் பல அறிவிப்புகளை வெளியிட்டாலும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்தது எதுவும் இல்லாமலும், மத்திய அரசின் நிதி கிடைக்காமலும், மாநில அரசு மத்திய அரசிடம் வாங்கிய கடனை ரத்து செய்யாமல் மக்களை ஏமாற்றியுள்ளது. அதற்கு மாநில அரசும் துணைதுணை போகியுள்ளார்கள் என நாராயணசாமி குற்றஞ்சாடியுள்ளார்.

Views: - 219

0

0