தேசிய விளையாட்டு தினம்: 35 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சிறுவர், சிறுமியர்கள் உலக சாதனை முயற்சி

Author: Udhayakumar Raman
29 August 2021, 5:29 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூரில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு 200க்கு மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் உலக சாதனை முயற்சியாக 35 நிமிடங்கள் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர்.

இந்தியாவில் ஹாக்கி விளையாட்டில் சாதனை படைத்த தயான் சந்த் என்பவரின் பிறந்த தினம் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடபட்டு வருகிறது . இந்த நிலையில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சாத்தூரில் உள்ள தனியார் சிலம்பம் பயிற்சி பள்ளியை சேர்ந்த சுமார் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 200க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 35 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். உலக சாதனை பயிற்சியின் போது இந்திய ஹாக்கி வீரர் தயான்சந்த் முகம் வரைந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு சிறுவர் சிறுமிகள் சிலம்பம் சுற்றினார்கள். மேலும் இதே பயிற்சி பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சாத்தூர் அருகிலுள்ள ஏழாயிரம் பண்ணை மற்றும் இ.ரெட்டியபட்டி ஆகிய பகுதிகளிலும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர். 3 இடங்களிலும் மொத்தம் சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இந்த உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் கிராமப்புற பெண் குழந்தை அதிக அளவில் கலந்துகொண்டு சிலம்பம் சுற்றினர். இந்நிகழ்ச்சி பெண்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிச்சியாகவும் இந்நிகழ்ச்சி அமைத்திருந்தது.

Views: - 119

0

0