களைக்கட்ட தொடங்கிய குஜராத்தி படேல் சமாஜ் மக்களின் நவராத்திரி தாண்டியா விழா

Author: kavin kumar
11 October 2021, 11:06 pm
Quick Share

கோவை: கோவையில் குஜராத்தி படெல் சமாஜ் மக்களின் நவராத்திரி தாண்டியா விழா களைக்கட்ட துவங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் வருடம் தோறும் இந்த மாதம் நவராத்திரி விழா கொலு பொம்மைகள் வைத்துகோலாகலமாக கொண்டாப்படும். இந்தியா முழுவதும் உள்ள இந்து மக்கள் இந்த நவராத்திரி விழாவை அவரவர் வழக்கப்படி கொண்டாடுவர். தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களிலும் இல்லங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து கடவுளை வழிபட்டு நவராத்திரி விழாவை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தி பட்டேல் சமாஜ் மக்களும் இந்த நவராத்தி விழாவை அவர்களது வழக்கப்படி கொண்டாட துவங்கி உள்ளது. குஜராத்த்திய மக்கள் இந்த விழாவில் பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய உணவுகளை கடவுளுக்கு படைத்து அவர்களது பாரம்பரிய நடனமான தாண்டியா நடனத்துடன் கொண்டாடுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நவராத்திரி விழா தாண்டியா நடனங்களுடன் துவங்கியுள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள குஜராத்தி படெல் சமாஜ் மக்களின் பிரயகுஞ் கோவிலில்(PRIYAKUNJ TEMPLE) இந்த விழா துவங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் மாலையில் இருந்து அவர்கள் இந்த விழாவில் வணங்கும் முக்கிய தெய்வங்களான மாதா லட்சுமி, மாதா காளிகா, மாதா பிரம்மபுத்ரி, மாதா சைலபுத்ரி, மாதா சந்தரகாந்தா, மாதா குஷ்மண்டிகா ஆகிய கடவுளுக்கு பூஜைகள் செய்து பாரம்பரிய உணவுகளை படைத்து பின்னர் தாண்டியா நடனமாடி விழாவை கொண்டாடுவர். இரவு 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் இந்த தாண்டியா நடனத்தில் மக்கள் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் கவலை கலைந்து விடியும் நாள் நன்நாளாக இருக்க வேண்டுமென கடவுளை வழிப்பட்டு நடனமாடுவர். முதல் நாளான இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 50 க்கும் மேற்ப்பட்ட கோவையில் வசிக்க கூடிய குஜராத்தி பட்டேல் சமாஜ் மக்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்து பாரம்பரிய உடை அணிந்து பாரம்பரிய உணவுகள் படைத்து தாண்டியா நடனமாடினர்.கொரொனா தொற்றால் தற்போது பல்வேறு கட்டுபாடுகள் உள்ளதால் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என தெரிவித்தனர்.

Views: - 135

0

0