நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது: தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

Author: Udhayakumar Raman
16 September 2021, 8:27 pm
Quick Share

தஞ்சாவூர்: ஆளும்கட்சியினரும், அதன் கூட்டணி கட்சியினரும் நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது என தமிழ் மாநில கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தினால் தான் முறையாக இருக்கும். எனவே, தமிழக தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொரோனா மூன்றாவது அலை வருவதாகச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கிராமம் வாரியாக முறைப்படுத்தி நடவடிக்கை வேண்டும். மக்களுக்கு மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

நீட் தேர்வின் அடிப்படையில், வரும் நாட்களில் பெற்றோர்கள், மாணவர்கள் எந்த விதமான குழப்பத்திலும் செயல்படக் கூடாது. எனவே, ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும், அதன் கூட்டணி கட்சியினரும் நீட் தேர்வை அரசியலாக்கக் கூடாது. கல்வியில் அரசியலைப் புகுத்துவது என்பது தவறான செயல். தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் அரசியல் கட்சியினர் கல்வியை அரசியலாக்கக் கூடாது. நீட் தேர்வால் மாணவர்களின் மனநிலை, அதன் மூலம் ஏற்பட்ட இழப்பு வேதனைக்குரியது என்றார்.

Views: - 119

0

0