திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
28 July 2021, 3:53 pm
Quick Share

நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து தச்சநல்லூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் நீட் தேர்வு ரத்து செய்வோம், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டையின் மூலமாக வழங்கப்படும், விவசாய கடன் ரத்து, நகை கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ஆட்சி அமைத்தவுடன் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் திமுக ஆட்சி அமைத்து 60 நாட்கள் கடந்தும் அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்படுவதை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தொண்டர்கள் வீடுகளில் முன் ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர். தச்சை கணேசராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படும் திமுகவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதேபோல நெல்லை மாவட்டம் முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக தொண்டர்கள் தங்களது வீட்டு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Views: - 147

0

0