சட்டவிரோதமாக பிடிபட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் அழிப்பு

Author: Udhayakumar Raman
23 September 2021, 6:31 pm
Quick Share

நெல்லை: நெல்லையில் சட்டவிரோதமாக பிடிபட்ட 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் மதுவிலக்கு காவல்துறையினரால் அழிக்கப்பட்டது.

நெல்லை மாநகர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவது, கடத்தி வருவதைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் 2020-2021 –ம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 7635 மதுபாட்டிகளை நெல்லை நீதிமன்றம் அழிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவுப்படி நெல்லை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி மற்றும் வட்டாட்சியர் தாஸ்பிரியன் முன்னிலையில் பாளையங்கோட்டை மகிழ்ச்சி நகரில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில். மதுபாட்டில்கள் தரையில் போடப்பட்டு ரோடு ரோலர் வாகனம் மூலம் அழிக்கப்பட்டது. அழிக்கப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு 13 லட்சம் ரூபாயாகும்.

Views: - 99

0

0