ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

1 December 2020, 4:45 pm
Quick Share

நெல்லை: கைலாசபுரம் பகுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்ட ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம் கைலாசபுரம் பகுதி பொதுமக்கள்ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் வீட்டுக்கு வீடு 4 முதல்10க்கும் மேற்பட்ட  ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் இங்கு வரும் மர்ம நபர்கள் ரோட்டில் சுற்றித் திரியும் ஆடுகள் மற்றும் வீட்டில் கட்டி போட்டிருக்கும் ஆடுகளையும் திருடி சென்று விடுகின்றனர். இதுகுறித்து அவர்கள் பலமுறைகாவல் துறையில் புகார் அளித்தும் ஆடு திருடர்களை பிடிக்க முடியாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று அந்த பகுதிக்கு வந்து ஆடு திருடன் ஒருவன்  ஆடு ஒன்றை திருடிச் செல்ல முயன்றபோது,

பொதுமக்களிடம் கையும் களவுமாக பிடிபட்டான்.  இதனைத் தொடர்ந்து அவனை அதே பகுதியில் கட்டி வைத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் ஆடு திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் தெரிவிக்கும் போது சுமார் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி  சென்றிருப்பதாகவும், தொடர்ந்து இதுபோல் திருட்டுசம்பவம் நடைபெற்று வருவதாகவும், இதுபோல் உள்ள குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டறிந்து புடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 

Views: - 19

0

0