தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கி உயிரிழப்பு

13 April 2021, 10:30 pm
Quick Share

நெல்லை: சிந்துபூந்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் இடி தாக்கி உயிரிழந்தார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் மாலை 4 மணி முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி மின்னலுடன் கனமழை மாநகரப் பகுதிகளான நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை, வண்ணாரபேட்டை,, பாளையங்கோட்டை பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்தது.

மாலை நேரத்தில் துணி துவைத்து குளிப்பதற்காக நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பவரது மனைவி ராஜேஸ்வரி சிந்துபூந்துறை பகுதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். இதனை அறிந்த சந்திப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த ராஜேஸ்வரி உடலை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவல் துறையின் அறிவுறுத்தலை தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

Views: - 39

0

0