குடியிருப்பு பகுதியில் வந்த ஆமையை மீட்ட தீயணைப்பு துறை

5 November 2020, 2:06 pm
Quick Share

நெல்லை: பாளையங்கோட்டை என்ஜீஓ பி காலனி குடியிருப்பு பகுதியில் வந்த ஆமையை தீயணைப்பு துறையினர் மீட்டு வனத் துறையில் ஒப்படைத்தனர்.

நெல்லை புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள பகுதி என்ஜீஓபிகாலனி, இங்கு நான்காவது தெருவில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் காலையில் நடைபயிற்சிக்காக தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டு வாசலில் ஒரு ஆமை இருப்பதைப் பார்த்தார். அதனை அப்புறப்படுத்த முயற்சித்த போது அது வீட்டு வாசல் பகுதியில் இருந்து செல்லாமல் அப்படியே நின்றது. இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்பு துறையினர் ஆமையை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆமையை காட்டுப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டுவிட்டனர். முன்னதாக ஆமை குடியிருப்பு பகுதியில் வந்ததை கேள்விப்பட்ட பலர் அந்த பகுதிக்கு வந்து அந்த சிறிய ஆமை வேடிக்கை பார்த்தும் பலர் செல்பி எடுத்துக் கொண்டு சென்றனர்.

Views: - 14

0

0