திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

14 July 2021, 5:34 pm
Quick Share

திருச்சி: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சிவசுப்பிரமணியன் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றிய முஜிபுர்ரகுமான் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று திருச்சி மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் மாநகராட்சி ஆணையர் தெரிவிக்கையில் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 77

0

0