14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்…

8 August 2020, 10:27 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டுமான தொழிலாளி ஒருவர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருப்பதி சாரத்தை சேர்ந்தவர் ஜான் (45) இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ஆடுமேய்க்க சென்றபோது அங்கு சென்று அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கட்டுமான தொழிலாளி ஜானை போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 9

0

0