பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட புதிய வகை போதை பொருட்கள் பறிமுதல்

22 October 2020, 7:28 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட புதிய வகை போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுப்பட்ட 3 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நாகர்கோவிலில் தனிப்படை போலீசார் வடசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 3 சிறிய கண் டைனர்களில் கஞ்சா ஆயிலும், அதனை பயன்படுத்த அதற்குரிய உபகரணங்ளும் இருந்தது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக குலசேகரத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், அருமனையை சேர்ந்த அனிஷ், நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்த பிரவீன் ஆகிய 3 பேர் பேர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த சொகுசு காரையும் போலீசார் கைப்பற்றினர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்த போது, பெங்களூரில் இருந்து இதனை சுமார் 1 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி அதனை கடத்தி வந்ததும், இதனை கள்ள சந்தையில் 3 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்துள்ளது.

Views: - 15

0

0