நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணி அமைப்பினர் 9 பேர் கைது

23 September 2020, 8:24 pm
Quick Share

மதுரை: நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை எரித்த இந்து முன்னணி அமைப்பினர் 9 பேரை போலீசார் கைது செய்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

மதுரை முனிச்சாலை சந்திப்பில் இந்து முன்னணிஅமைப்பின் ஒரு பிரிவான இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும் குரல் கொடுத்து வரும் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் மறைவாக நின்று நடிகர் சூர்யாவின் புகைப்படம் பொருத்திய உருவபொம்மையை தீ வைத்து கோசங்களை முழங்க ஆரம்பித்தனர் இதை பார்த்த காவல்துறையினர் உருவ பொம்மையில் இருந்து வரும் தீயை அணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் கைது செய்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் தினமணி சந்திப்பு அருகே சற்று பரபரப்பு ஏற்பட்டது.