தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை: மத்திய அரசு மீது கமல்ஹாசன் குற்றச்சாட்டு

Author: Udhayakumar Raman
24 March 2021, 8:33 pm
Quick Share

மதுரை: ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதை காட்டுவதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- தேர்தல் நேரத்தில் ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது தமிழர்கள் மீது எந்தவித அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை அவர்களுக்கு நன்மை பயக்காது. தங்களது தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கணினி வழங்குவது அரசு சொத்து. தமிழகத்தை காகித பரிமாற்றம் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் முயற்சியாக கணினி வழங்கப்படும். கணினி வழி செயல்பாடு மூலம் இடைத்தரகர்கள் அகற்றப்படுவர்கருத்துக்கணிப்புகள் குறித்து கேட்ட கேள்விக்கு, கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு என்றார்.

Views: - 120

0

0