ராஜ்யசபா தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை: தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்

Author: Udhayakumar Raman
20 September 2021, 5:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி ராஜ்யசபா தேர்தலில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உரிமை இல்லை என தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு ராஜ்யசபா இடத்திற்கான தேர்தல் வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது, இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது, தேர்தலில் போட்டியிட இதுவரை அங்கீகரிக்கப்படாத மூன்று சுயேட்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளார்கள், வேட்பு மனு தாக்கல் வரும் 22ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என். ஆர் காங்கிரஸ் – பாஜக இடையே யாரை வேட்பாளரை நிறுத்துவது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது, இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏக்கள் மட்டுமே வாக்களிக்கலாம் என்றும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க முடியாது என சட்டப்பேரவை செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான முனிசாமி தெரிவித்துள்ளார்.

Views: - 198

0

0