எஸ்.வி.சேகர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கரும்புள்ளி: உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி…

6 August 2020, 10:21 pm
Quick Share

திருவாரூர்: எஸ். வி சேகர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு கரும் புள்ளி என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், அரித்துவார்மங்கலம் பகுதிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு மருத்துவ முகாமை தமிழக  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கிவைத்து பொதுமக்களுக்கு கபாசுரக்குடிநீர் சத்து மாத்திரைகள் முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். நீடாமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களில் சுமார் 78.55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 851 பேர் கொரோனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளதாகவும் உலக அளவில் கொரோனாவால் பாதித்தோரில் 63.76 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும், இந்திய அளவில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  67  சதவீதம்  தமிழகத்தின் கொரோனாவில் இருந்து மீண்டோர் 78.55 சதவீதமாக உள்ளதாகவும் சென்னையை பொறுத்தவரை 86.48 சதவீதம் பேர் குணமடைந்திருப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

S.v.சேகர் ஏற்கனவே அதிமுக வேட்பாளராக இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோதும் மக்களிடம் சென்று வாக்கு சேகரித்த போது அதிமுக கொடி தான் அவரது வாகனத்தில் இருந்தது என சுட்டிக்காட்டிய அமைச்சர் காமராஜ் s.v.சேகர் பேச்சு கண்டிக்கத்தக்கது என தெரித்தார். அதிமுகவினரும் தமிழக மக்களும் s.v.சேகரை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் s.v.சேகரின் செயல் மிகவும் மோசமானது என தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியினரே s.v.சேகரை பாஜக கட்சிக்காரர் என கூறுவதில்லை.

இந்நிலையில் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு கூறுவது போல் நானும் ரவுடிதான் என s.v.சேகர் கூறி வருவதாகவும் பாரதிய ஜனதா கட்சிக்கு sv.சேகர் ஒரு கரும்புள்ளி என்றும் தெரிவித்தார் . தமிழக்த்தில் இருமொழி கொள்கைதான் பின்பற்றப்படும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.